விராட் கோலியோட பிரச்சனையே இந்த ஒரு ஷாட்ல தான். கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம் – இளவயது கோச் அறிவுரை

rajkumar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தற்போது பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள், பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளரான ராஜ் குமார் ஷர்மா இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து அணிக்கெதிராக விராட்கோலி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராத் கோலிக்கு தான் எங்கு தவறு செய்கிறோம் என்பது நன்றாக தெரியும். நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சவுதி நல்ல ஸ்விங் வீசக்கூடிய பவுலர். அவருக்கு எதிராக அவுட் சைட் ஆப் ஸ்டம்பில் அடித்து விளையாட கூடாது அந்த பந்தினை விட்டு விட வேண்டும்.

- Advertisement -

அவரது லென்த்தை வைத்து பந்தை விடலாமா ? வேண்டாமா ? என்பது குறித்து சரியாக கணிக்க வேண்டும். ஏனெனில் கோலி சவுதி ஆகியோர் இருவரும் நீண்ட வருடங்களாக விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவருமே அண்டர் 10 அணியில் இருந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி வருவதால் அவர்களுக்கு இடையேயான போட்டி பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. 19 வயதுக்கு உட்பட்டவர் போட்டியிலேயே சவுதி விராட் கோலிக்கு எதிராக நல்ல வியூகங்களை அமைப்பார்.

Southee-3

எனவே அவருக்கு எதிராக கோலி கவனத்துடன் விளையாட வேண்டும். அதுமட்டுமின்றி கோலிக்கு கவர் டிரைவ் தான் பிடித்தமான ஷாட். அப்படி கவர் டிரைவ் விளையாடும் போது பந்து ஸ்விங் ஆகும் வேளையில் பல முறை ஸ்லிப்பில் கேட்ச் ஆகி அவுட் ஆகி உள்ளார். எனவே அவர் கவர் டிரைவ் விளையாடும்போது நன்கு யோசித்து விளையாட வேண்டும் என ராஜ் குமார் சர்மா கோலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Southee

அவர் கூறியது போலவே சவுதிக்கு எதிராக கோலி இதுவரை பத்து முறை ஆட்டம் இழந்துள்ளார் கோலி இப்படி ஒரே பந்துவீச்சாளருக்கு எதிராக பலமுறை ஆட்டம் இழப்பது அரிதான ஒரு விடயம்தான் எனவே ராஜ்குமார் ஷர்மாவின் அறிவுரை நிச்சயம் கோலிக்கு பயனுள்ள ஒன்றாக அமையும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த டெஸ்ட் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கும் என பலரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement