விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இனியும் புரூவ் பண்ணனுமா? காமெடி பண்ணாதீங்க – ராஜ்குமார் சர்மா ஓபன்டாக்

Rajkumar Sharma
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதினால் இந்த ஒருநாள் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு 2027 உலக கோப்பை வரை தாங்கள் இந்திய அணியில் விளையாட இருவருமே விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.

ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருமே அனைத்தையும் சாதித்து விட்டார்கள் : ராஜ்குமார் சர்மா

ஆனால் தற்போது தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர்கள் இருவரும் வயது மூப்பு காரணமாகவும், அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதனாலும் ஓய்வை நோக்கி நிர்வாகத்தின் அழுத்தத்தால் தள்ளப்பட்டு வருகிறார்கள் என்கிற விமர்சனமும் இருந்து வருகிறது. அதன் முதற்கட்டமாக தற்போது ரோகித் சர்மாவின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா தொடர் தான் இருவருக்குமே கடைசி தொடர் என்றும் இந்த தொடர் முடிந்ததும் அவர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என்றெல்லாம் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்களது ஓய்வு குறித்து எதுவும் பேசாமல் இந்த ஆஸ்திரேலிய தொடருக்காக முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா தற்போது முதல் முறையாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் சேர்த்து வைத்து தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : எதிர்வரும் இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடி நிரூபித்தால் மட்டுமே தொடர் வாய்ப்பு என்று யாராவது கூறினால் அது என்னை பொருத்தவரை மிகப்பெரிய காமெடி என்று தான் கூறுவேன்.

- Advertisement -

ஏனெனில் இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சூழல்களை அவர்கள் இருவருமே ஒன்றாக கடந்துள்ளனர். இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறப்பான பேட்ஸ்மேன்களில் இவர்கள் இருவரும் நிச்சயம் இடம் பெறுவார்கள். அந்த அளவிற்கு பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்கு மகத்தான பங்களிப்பை இருவரும் வழங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஓராண்டுக்குள் டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த தொடர்களை ஒன்றாக கைப்பற்றியுள்ளனர் .

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிபோனது இதனால் தான் என நினைக்கிறேன் – மேத்யூ ஹைடன்

அதோடு அவர்கள் 2027 ஒருநாள் கோப்பையையும் கைப்பற்றிய பின்னர் விடை பெறலாம் என்று யோசித்து இருக்கலாம். எனவே அவர்களது ஆசைக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆஸ்திரேலிய தொடரில் அவர்களது செயல்பாடுகளை சோதித்தால் அது காமெடி தான். ஏனெனில் அவர்கள் இருவருமே தங்களை நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் சர்வதேச போட்டிகளில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் என ராஜ்குமார் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement