“தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் இருக்கா ? ” மனம்திறந்த ஐ.பி.எல் முன்னாள் தலைவர் – விவரம் இதோ

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரராக திகழ்ந்த தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமார் 16 ஆண்டுகளாக விளையாடி 90 டெஸ்ட் போட்டிகளிலும், 350 ஒருநாள் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

7

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பினால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், சக அணி வீரர்கள் என அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தீவிர ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவருக்கு ஃபேர்வெல் மேட்சை ஏற்பாடு செய்யுமாறு பிசிசிஐ-யிடம் கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தோனிக்கு பிரியாவிடை போட்டி ஏற்பாடு செய்யப்படுமா என்பது குறித்து கேள்விக்கு தற்போது முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Dhoni

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற தோனி தனக்கு ஃபேர்வெல் மேட்சை ஏற்பாடு செய்யுமாறு பிசிசி இடம் கோரிக்கை வைக்காததால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடையாது. அதனால் எனக்கு தெரிந்து அவருக்கு ஃபேர்வெல் மேட்ச் ஏற்பாடு செய்யப்படாது என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். சச்சினுக்கு மட்டுமே இந்திய அணி சார்பில் சிறப்பான ஃபேர்வெல் மேட்ச் செய்து வழி அனுப்பப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னணி வீரர்களான ஷேவாக், கம்பீர், யுவராஜ் போன்றவர்களின் வரிசையில் தோனிக்கும் ஃபேர்வெல் மேட்ச் நடத்தப்படாது என்று தெரியவந்துள்ளது. மேலும் இப்படி ஒரு கேப்டனை, இப்படி ஒரு வீரரை இழந்துள்ள இந்திய அணி நிச்சயம் அவரை கௌரவித்து வழியனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இருப்பினும் தற்போது ஒரு ஆறுதலாக இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், டோனி சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.