- Advertisement -
ஐ.பி.எல்

2026 ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயர் வைபவ் சூர்யவன்ஷி தான்.. ஏன் தெரியுமா? – ரஜத் பட்டிதார் பாராட்டு

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக விளையாடிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதோடு இந்த தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய வீரர், அதிக சிக்ஸர்களை அடித்த வீரர், அதிக மதிப்பு மிக்க வீரர், வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரர் என பல விருதுகளை வென்று அசத்தியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி தான் இந்த ஆண்டின் சிறந்த பிளேயர் : ரஜத் பட்டிதார்

அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாக வெகு விரைவில் அவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் அசத்தலாக இருந்து வருகிறது. அதோடு உலகின் பல முன்னணி பவுலருக்கு எதிராக இந்த ஆண்டு அவர் விளையாடிய ஆட்டம் பலராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் இந்த ஆண்டு நடைபெற்ற 2026 ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயர் என்றால் அது வைபவ் சூர்யவன்ஷி தான் என்று தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த சீசனின் மிகச்சிறந்த வீரர் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. அது நிச்சயம் வைபவ் சூரியவன்ஷி தான். ஏனெனில் இளம் வீரராக இருந்தாலும் இந்த தொடரில் தனது பேட்டிங்கால் ஆதிக்கம் செலுத்திய அவர் சாதாரணமாக விளையாடவில்லை. உலகின் தலைசிறந்த பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாடியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்காக விளையாடப்போகும் வைபவ் சூர்யவன்ஷி.. எப்போ தெரியுமா? – வெளியான அட்டவணை

அவர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. நான் அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் பந்து எல்லைக்கோட்டிற்கு அப்பால் சென்று கொண்டிருந்தது. அவருடைய சிறப்பான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என்று ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -