- Advertisement -
ஐ.பி.எல்

2026 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக ஆர்.சி.பி அணியின் கேப்டனுக்கு நேர்ந்த சோகம் – விவரம் இதோ

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் வேளையில் ஆண்டுதோறும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வந்தது.

ரஜத் பட்டிதாருக்கு ஏற்பட்டுள்ள காயம் :

இவ்வேளையில் இந்த ஆண்டு ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அந்த தாகத்தை தீர்த்துக் கொண்டது. நடப்பு 2025-ஆம் ஆண்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்.சி.பி அணி நிச்சயம் அடுத்த ஆண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டும் அளவிற்கு சிறப்பான அணியாகவே இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர்களது ஆட்டம் சிறப்பாகவே இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் மத்தயில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஏனெனில் இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியில் இடம்பிடித்து விளையாடியிருந்த ரஜத் பட்டிதார் அந்த போட்டியின் போது காயமடைந்தார்.

- Advertisement -

அந்த காயத்தின் தன்மையை தற்போது ஆராய்ந்த போது அவர் காயத்திலிருந்து குணமடைய குறைந்தது சுமார் 4 மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதன் காரணமாக எதிர்வரும் ரஞ்சி தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கு முன் இந்த 3 தொடர்களில் விளையாடுவது ரொம்ப சூப்பரா இருக்கு – சூரியகுமார் ஹேப்பி

ஆனாலும் அவர் 2026 ஐபிஎல் தொடருக்குள் தயாராகி விடுவார் என்று கூறப்படுகிறது. 2026 ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்திலோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அதற்குள் அவர் முழுஉடற்தகுதி உடன் பார்மை எட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -