தோனி எடுத்த திடீர் முடிவே 2015 உலககோப்பையில் பாக் அணியை வீழ்த்த உதவியது – ரெய்னா பகிர்ந்த ரகசியம்

raina-dhoni
- Advertisement -

இந்திய அணி தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அடுத்து 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்தத்தொடரிலும் நடப்பு சாம்பியனாக இந்திய அணி கம்பீரத்துடன் களமிறங்கியது. லீக் சுற்றுகளில் தங்களை எதிர்த்த அணிகளை பந்தாடிய இந்திய அணி அறையிறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது.

Dhoni

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு கோப்பையை கைப்பற்றியது. இதே தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அரையிறுதி போட்டிவரை சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக திணறி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இந்த உலகக் கோப்பை தொடரின் போது தோனி நிகழ்த்திய ஒரு சாமர்த்தியமான முடிவைப் பற்றி பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனியின் சாமர்த்தியமான முடிவு இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில் : டோனி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் அதனை கேள்வி கேட்பதில்லை.

dhoni

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடிரென 20வது ஓவர் வந்தபோது என்னை தயாராகும்படி கூறினார் தோனி. அப்போது விராட் கோலி நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். திடீரென ஷிகர் தவான் தனது விக்கெட்டை இழக்க நான் களம் இறங்கினேன். விராட் கோலியுடன் சேர்ந்து நன்றாக ஆடி 56 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அதன் பின்னர் எனது ஆட்டத்தை இழந்தேன்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின்னர் தோனியிடம் சென்று என்னை ஏன் முன்னரே களத்தில் இறக்கி விட்டீர்கள் என்று கேள்வி கேட்டேன். அதற்கு தோனி லெக் ஸ்பின்னர் பந்துகளை நீ நன்றாக ஆடக்கூடிய ஒருவன் அதனால் தான் உன்னை முன்னரே இறக்கிவிட்டேன் என்று கூறினார்.

Raina

இவ்வாறு தோனி அவ்வப்போது பல சிறந்த முடிவுகளை எடுத்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலககோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி.நடத்திய அனைத்து தொடர்களையும் கைப்பற்றிய வெற்றிக்கேப்டன் என்பது நாம் அறிந்ததே. மேலும் தொடர்களில் இவரது மிக கூலான கேப்டன்சியால் இந்திய அணி பல வெற்றிகளை அடைந்ததும் நாம் கண்டதே.

இந்நிலையில் ரெய்னாவும் தோனி குறித்து கூறிய இந்த முக்கிய விடயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் சென்னை அணிக்காக தொடர்ந்து கேப்டனாகவும், துணைக்கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களது தலைமையில் சென்னை அணி 3 முறை ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement