இந்திய அணியை சரியாக கட்டமைச்சதே இவர்தான். கங்குலி கிடையாது – ரெய்னா கூறிய சர்ச்சை கருத்து

Raina
- Advertisement -

2000ஆம் ஆண்டிற்குப் பிறகு சூதாட்டத்தில் சிக்கி நிலைகுலைந்துபோன இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்ததில், முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு அதிகமான பங்கு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கி ஒரு புது இந்திய கிரிக்கெட் அணியையே அவர் உருவாக்கி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, இந்திய அணியை கட்டமைத்ததில் சவுரவ் கங்குலிக்கு எந்தவித பங்கும் இல்லை என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

Ganguly

கடந்த ஆண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, தற்போது “பிலீவ்” என்ற தனது சுய சரிதையை எழுதி வருகிறார். இதில் சவுரவ் கங்குலியை குறிப்பிட்டு எழுதியிருக்கும் அவர், இந்திய கிரிக்கெட் அணியை பற்றி மக்கள் அனைவரும் பேசும்போது, சவுரவ் கங்குலிதான் இந்திய அணியைக் கட்டமைத்து முன்னோக்கி அழைத்துச் சென்றார் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

- Advertisement -

சவுரவ் கங்குலி ஒரு கேப்டனாக செயல்பட்டு அணியில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது உண்மைதான். ஆனால் இந்திய அணியை கட்டமைத்தது உண்மையில் ராகுல் டிராவிட்தான் என்று அந்த சுயசரிதையில் சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார். அதில் மேலும் எழுதியிருக்கும் அவர்,
சவுரவ் கங்குலி தலைமையில் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தாலும், ராகுல் டிராவிட் தலைமையில் தான் அவர்கள் முதிர்ச்சியடைந்த வீரர்களாக உருவெடுத்தார்கள்.

Dravid

இந்திய அணிக்காக விளையாடுவதை டிராவிட் எப்போதுமே ஒரு கௌரவாகமே நினைத்து வந்தார். அவரது தலைமையின் கீழ் விளையாடிய மஹேந்திர சிங் தோணி, முனாஃப் பட்டேல், யுவராஜ் சிங், இர்பான் பதான் போன்ற வீரர்களுக்கு அவர் ஊக்கமளித்ததால் தான் எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் மிகப்பெரிய வீரர்களாக திகழ்ந்தார்கள் என்றும் அவர் அந்த சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

Ganguly 2

2005ஆம் ஆண்டு ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த க்ரேக் சாப்பலுக்கும் சவுரவ் கங்குலிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கங்குலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ராகுல் ட்ராவிட்டிடம் ஒப்படைக்க்கப்பட்டது. அதே ஆண்டு அறிமுக வீரராக இந்திய அணியில் இடம் பிடித்த சுரேஷ் ரெய்னா, க்ரேக் சாப்பலின் நம்பிக்கையான வீரர்கள் வரிசையில் முக்கிய இடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement