தேர்வுக்குழு மட்டுமல்ல நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இவரும் பதில் சொல்லல – ரெய்னா ஆதங்கம்

Raina

தோனி தலைமையில் இந்திய அணி இருந்தபோது அதில் மிக முக்கியமான ஒரு அங்கமாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. 2006ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடி வருகிறார். தோனி 2007 ஆம் ஆண்டு கேப்டன் ஆனதிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா மிகவும் முக்கியமான வீரராக இருந்தார்.2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது மிக முக்கிய பங்காற்றியவர்.

Raina

அவர் அதற்கு தொடர்ச்சியாக தனது ஆட்டத்தை மெருகேற்றி பந்து வீச்சிலும் நன்றாக செயல்பட்டார். தோனி 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் துறந்தார். இதன் காரணமாக அவருடைய ஆஸ்தான செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னா ஓரம் கட்டப்பட்டார். இருந்தாலும் 2018 ஆம் ஆண்டு மிடில் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் தேர்வு குழு தங்களை சரியாக கையாளவில்லை என்று சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் போன்ற தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த எம்எஸ்கே பிரசாத் உள்நாட்டு போட்டிகளில் அவர் சரியாக ஆடாததால்தான் அவர் மீண்டும் அணியில் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

Raina

இதற்கு பதிலடி கொடுத்த சுரேஷ் ரெய்னா அணி வீரர்களுக்கும் தேர்வு குழுவினருக்கு மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அவர்கள் எப்போதும் சரியான தகவல்களை தெரிவிப்பதில்லை. என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுவதில்லை . ஒரு வீரரை ஏன் நீக்குகிறோம் என்று அவரிடம் நேரடியாக சொல்ல வேண்டும். அதனை சொல்லியிருந்தால் நான் சரி செய்து இருப்பேன்.

- Advertisement -

அதுபோல் கேப்டனாக இருந்த விராட் கோலி எனது உடல் தகுதியில் கவனம் செலுத்தச் சொன்னார். அதனை சரியாக செய்தேன். ரோஹித் சர்மாவிற்கு எனது திறமை நன்றாக தெரியும். எனக்கு அணியில் எந்த வீரடுடனும் பிரச்சனை இல்லை. தேர்வுக் குழுவினர் தொழில் ரீதியாக இருக்க வேண்டும் அவர்களுக்கு அது தெரியவில்லை இதெல்லாம்தான் அணியில் எனது இடம் பறி போவதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

Raina

ஏற்கனவே இந்திய அணியில் தேர்வுக்குழு நிராகரிப்பால் பல திறமையான வீரர்கள் தங்களது வாய்ப்பை இழந்துள்ளனர். அந்தவகையில் தேர்வுக்குழுவினர் மற்றுமின்றி கேப்டன் கோலியும் அவரது நீக்கத்திற்கு சரியான காரணத்தை கூறவில்லை என்று ரெய்னா மறைமுகமாக கோலியை குறிப்பிட்டே இந்த கருத்தினை கூறியுள்ளார்.