என்னை பொறுத்தவரை இவரே எப்போதும் சிறந்த கேப்டன் – ரெய்னா ஓபன் டாக்

Raina

இந்திய அணியின் முன்னணி அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக விளையாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திய அணியில் தற்போது அவர் ஆடவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.

Raina

மேலும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட இருக்கும் இவர் தற்போது சென்னையில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரெய்னா பேசுகையில் :இந்திய அணியை வலிமையுள்ள அணியாக மாற்றியதில் தோனியின் பங்கு மிக அதிகம்.

என்னைப்பொறுத்தவரை நான் விளையாடிய காலகட்டங்களில் சரி, தற்போதும் சரி தோனியே எனது சிறந்த கேப்டன் என்று நான் கூறுவேன். மேலும் தற்போது ஓய்வு அறையில் கூட தோனியின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறினார். 38 வயதாகும் தோனி கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Raina

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தோனி இடம்பெறும் வேண்டுமானால் வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். அப்படி அவர் அளிக்கும் பட்சத்தில் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பு உள்ளது என்று கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -