இந்திய அணியில் நான் தொடர்ந்து விளையாட இதுவே காரணம். தோனியோட நெருக்கம் மட்டும் காரணம் இல்ல – ரெய்னா வெளிப்படை

Raina-5
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சரேஷ் ரெய்னா, தனது ஆக்ரோஷமான பேட்டிங் திறமையால் மட்டுமல்லாமல் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராகவும் செயல்பட்டு பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமா இருந்துள்ளார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் செயல்பட்ட போதிலும், இந்திய அணியின் கேப்டனாக இருந்த மஹேந்திர சிங் தோணிக்கு நல்ல நண்பராக ரெய்னா இருப்பதால்தான் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்ற விமர்ச்சனங்களும் அப்போது எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Raina

இந்த விமர்ச்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, “பிலீவ்” என்ற தனது சுய சரிதையில் தற்போது குறிப்பிட்டு எழுதியுள்ளார் சுரேஷ் ரெய்னா. அதில் அவர், இந்திய அணியில் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்ததற்கு, மஹேந்திர சிங் தோணியுடனான என்னுடைய நெருக்கமான நட்பு தான் காரணம் என்று இந்திய மக்கள் விமர்ச்சித்தபோது அது எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது. தோணியின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற நான் எப்படி கடினமாக பாடுபட்டேனோ அதேபோலத்தான் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறவும் நான் கடினாமாக பாடுபட்டேன்.

- Advertisement -

நான் சிறப்பாக விளையாடியதால்தான் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மேலும், என்னிடமிருக்கும் திறமையை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பது மஹேந்திர சிங் தோணிக்கு நன்றாகவே தெரியும். நானும் அவரை முழுதாக நம்பினேன் என்று தனது சுயசரிதையில் எழுதியருக்கிறார் சுரேஷ் ரெய்னா. மஹேந்திர சிங் தோணியும், சுரேஷ் ரெய்னாவும் நீண்ட காலமாக மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

Raina

கிரிக்கெட்டில் மட்டுமல்லாது தங்களது பொது வாழ்க்கையிலும் நல்ல நண்பர்களாக இருந்து வரும் இந்த இரண்டு பேரும், ஒரே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்திருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியில் ஒன்றாக விளையாடிய இருவரும், ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தற்போதுவரை ஒன்றாகவே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Raina-2

இந்திய அணிக்காக 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்களை அடித்திருக்கும் அவர், 78 டி20 போட்டிகளில் 1605 ரன்களையும அடித்திருக்கிறார். 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு தேர்வாகாத சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

Advertisement