என்னுடைய வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால் இந்த தமிழ் நடிகர் தான் நடிகனும் – ரெய்னா விருப்பம்

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணியின் துணை கேப்டனும் ஆன சுரேஷ் ரெய்னா உலகம் முழுவதும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்னத் தல என்று ரசிகர்கள் அன்பான அடையாளத்திற்கு இடையே வலம் வந்து கொண்டிருக்கும் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க சிலர் முனைப்பு காட்டி வருகின்றார்.

Raina

ஏற்கனவே இந்திய அணியின் வீரர்களான தோனி, டெண்டுல்கர் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க சில இயக்குனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர் என்ற ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் எந்த நடிகர் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கொடுத்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி சுரேஷ் ரெய்னா கூறுகையில் :

Suriya

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அதில் நடிக்க தமிழ் நடிகர் சூர்யா தான் பொருத்தமாக இருப்பார். அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவரின் உழைப்பு அலாதியானது. அதனால் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் சூர்யா நடிக்கும் போது அது நன்றாக இருக்கும் என ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement