இந்திய அணியின் பவுலரான இவரை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் நடுங்கியுள்ளனர் – ரெய்னா ஓபன் டாக்

Raina
- Advertisement -

இந்திய அணியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிக முக்கிய வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்தியாவிற்காக பல முக்கிய போட்டிகளில் நன்றாக விளையாடி வெற்றி பெற்று கொடுத்துள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ரெய்னா அவ்வப்போது பகுதி நேர பந்துவீச்சாளர்களாகவும் திகழ்ந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா ஓய்வு நேரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கை பற்றி பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

Raina

- Advertisement -

தனது மிக இளம் வயதிலேயே இந்திய அணிக்கு 1998ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஹர்பஜன். 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.

குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் தன்மை கொண்டவர் ஹர்பஜன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பல சர்ச்சைகளை செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இர்பான் பதான் உன்னுடன் பேசிய சுரேஷ் ரெய்னா ஹர்பஜன்சிங் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Harbhajan

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர் ஹர்பஜன்சிங். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மிகப்பெரிய போராளி. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். ஹர்பஜன் சிங்கிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பிழுக்க சற்று யோசிப்பார்கள். அவரிடமிருந்து அவர்கள் விலகியே இருப்பார்கள் என்று ஹர்பஜனை பற்றி பெருமையாக கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

- Advertisement -

ஹர்பஜன் இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளும், 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளும், 160 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அது தவிர 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளராக இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ashwin-Harbhajan

டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினின் வருகையால் முன்கூட்டியே தனது வாய்ப்பை இழந்த ஹர்பஜன் மட்டும் இன்னும் சிறிது காலம் விளையாடி இருந்தால் இன்னும் பல விக்கெட்டுகளை ஹர்பஜன் வீழ்த்தி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement