தோனி ஐ.பி.எல் க்கு ரெடி. ஆனால் இந்திய அணிக்கு திரும்புவது இவர் கையில்தான் உள்ளது – ரெய்னா பேட்டி

raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. அதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் தோனி பங்கேற்காததால் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனி இனிமேல் விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் எழுந்துள்ளது.

raina

- Advertisement -

தோனியின் எதிர்காலம் குறித்து அண்மையில் பேசிய இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் : ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். தேர்வாளர்களுக்கும் தெரியும் என்று தோனியின் இடம் குறித்து சூசகமாக தனது கருத்தினை தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா கூறியதாவது : தோனி மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வருவார். ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியை தொடங்குவார். இப்போது அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கிரிக்கெட்டை விட்டு போக வேண்டும் என்று நினைத்து இருந்தால் எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் அவரே சென்று இருப்பார்.

raina
ஆனால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இப்போதும் பிட்டாக இருக்கிறார். அவருடைய தேவை இப்போது இந்திய அணிக்கு அவசியம் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு தோனி திரும்புவதில் நிச்சயம் கோலி எடுக்கும் முடிவே முக்கியமானதாக இருக்கும். எல்லாம் அவர் கையில்தான் உள்ளது என்று சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement