MS Dhoni : பெயரளவில் தான் கோலி கேப்டன். மற்றபடி எல்லாமே தல தோனிதான் – ரெய்னா பேட்டி

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட

Dhoni
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை மறுதினம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Kohli

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் தோனியின் பங்களிப்பு குறித்து இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ரெய்னா கூறியதாவது : இந்த உலக கோப்பையில் கோலி பெயரளவில் மட்டுமே கேப்டனாக செயல்படுவார். உண்மையான கேப்டனாக கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்படுவார்.

- Advertisement -

ஏனெனில் கோலி கேப்டனாக இருந்து பேட்டிங்கில் தனது கடைமையினை நிறைவேற்றுவார். பீல்டிங்கில் மாற்றங்களையும் மற்றும் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பது போன்ற பல விடயங்களை தோனியை பார்த்துக்கொள்வார். அதனால் கோலிக்கு வேலைப்பளு குறைவு. மேலும் கோலியும் தோனியின் ஆலோசனைகளை கண்டிப்பாக கேட்பார்.

Kohli

இதனால் அணிக்கு நல்ல விடயங்கள் ஏற்படும். மேலும் தோனியின் வியூகங்கள் எப்போதும் சரியாக இருப்பதால் கோலியும் அதனை நிராகரிக்க மாட்டார். எனவே இந்த தொடரில் தோனி சிறப்பாக இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். மேலும் கோலி இந்த தொடரை வெற்றியுடன் முடித்து சாதித்துக் காட்டுவார் என்று ரெய்னா கூறினார்.

Advertisement