Suresh Raina : துவக்கம் சரியாக அமைந்தும் தோல்விக்கு இதுவே காரணம் – ரெய்னா விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி இன்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமை

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி இன்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Raina

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதன் பின் வந்த வீரர்கள் பொறுமையாக ஆட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். வார்னர் 50 ரன்களும், பேர்ஸ்டோ 61 ரன்களையும் குவித்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின்பு வந்த வீரர்கள் சுமாராக ஆட அந்த அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Bairstow

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரெய்னா கூறியதாவது : நாங்கள் விழிப்பு கொள்ள வேண்டிய நேரம் இது. வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். ஆனால், மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம். மேலும், நாங்கள் அடித்த ரன்கள் வெற்றிக்கு போதுமான ரன்கள் கிடையாது, இன்னும் நிறைய ரன்கள் அடித்திருக்க வேண்டும்.

Watson2

தோனி இப்போது நலமாக உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார். அவர் அணியில் இல்லாததும் எங்கள் அணிக்கு ஒரு பலவீனம் தான். எங்களது அணியில் அனைவரும் சீனியர் வீரர்கள் அடுத்த போட்டியில் மீண்டு வருவோம் என்று ரெய்னா கூறினார்.

Advertisement