தோனிக்கு இப்படி ஒரு திறமை இருக்கா ? ராணுவ பயிற்சியில் தோனி இதைக்கூட செய்திருக்காரா – ரெய்னா பகிர்ந்த வீடியோ

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருரான தோனி இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது இந்த பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற சிறப்பு ஹாஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலதரப்பட்ட திசைகளிலிருந்தும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Dhoni-4

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் துணை கேப்டனும், சென்னை ரசிகர்களால் ரசிகர்களால் சின்ன தல என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தனது தலைவனுக்காக ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறப்பு பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்று குறிப்பிட்டுள்ள சுரேஷ் ரெய்னா : தோனி ஷூட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே தோனி இந்திய பராமிலிட்டரி துறையில் ஒரு முக்கிய அங்கம் வகித்து வருவது நாம் அறிந்ததே. மேலும் இந்திய ராணுவத்தில் அவர் கொண்டுள்ள ஈடுபாடும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது தோனி சூட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவினை பகிர்ந்துள்ள ரெய்னா அதன் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். ரெய்னா பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனி இப்படி ஒரு பயிற்சி மேற்கொண்டுள்ளாரா என்ற ஆச்சரியமும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement