தோனியின் கேப்டன்சி திறமை அப்படியே இவரிடம் உள்ளது – இந்திய வீரரை புகழ்ந்த ரெய்னா

- Advertisement -

கொரோனோ வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதன் காரணமாக கிடைத்த ஓய்வு நேரத்தை தற்போது சமூக வலைத்தளம் வழியாக பகிர்ந்து வரும் அவர்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தும், தங்களது அனுபவத்தை சக வீரர்களுடன் நேரலையில் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர்.

Raina

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் ஸ்கிரீன் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தோனியின் கேப்டன்சி யாருடன் ஒத்துபோகிறது என்பது குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். பொதுவாகவே தற்போது வெளியாகி வரும் செய்திகளில் தோனி குறித்த ஒரு கேள்வியாவது வீரர்களின் முன்வைக்கப்படுகிறது. அந்தவகையில் தோனி போன்ற கேப்டன்சி திறன் உள்ள வீரர் குறித்து ரெய்னா தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் தற்போது ரெய்னா அளித்துள்ள பேட்டியில் ரெய்னா கூறியதாவது : தோனியை போலவே கேப்டன்சியில் ரோஹித்தும் செயல்படுகிறார். போட்டியின் போது தோனி எப்படி வீரர்களை உற்சாகப் படுத்துவதோடு , ஊக்கப்படுத்துகிறாரோ அதைப்போலவே ரோகித் சர்மாவும் மும்பை அணி வீரர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துகிறார். இதுபோன்ற செயல்களால் வீரர்களை அது சிறப்பாக விளையாட தூண்டும்.

மேலும் இந்த விஷயம் தான் ரோகித் இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : புனே அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா தோனி தலைமையிலான அணிக்கு எதிராக நகர்த்திய சில முடிவுகள் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. ஆட்டத்தின் மிகப் பரபரப்பான சூழ்நிலையில் ரோஹித் எடுத்த முடிவுகள் அற்புதமானவை.

- Advertisement -

தோனி எவ்வாறு இறுதிகட்டத்தில் சிறப்பான முடிவுகளை எடுப்பாரோ அதே போன்ற சில முடிவுகளை நான் ரோஹித்திடம் கண்டேன். இதனால்தான் அவர் நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் என்றும் அதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்றும் சுரேஷ் ரெய்னா கூறினார். மேலும் தோனி கேப்டன்சியில் எவ்வாறு செயல்படுகிறறோ அதே போன்று ரோஹித்தும் செயல்படுகிறார் என்கிற ரெய்னாவின் இந்தக் கருத்தினை ரசிகர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி ஏற்கனவே இந்திய அணியில் கேப்டன் மாற்றம் குறித்த பேச்சுகள் எழுந்து வருகின்றன. அதாவது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு ரோஹித் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்து வந்தது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் ரோகித் டி20 வடிவத்திற்கு ஏற்ற சரியான கேப்டனாக இருப்பார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 ஐ.பி.எல் சீசனில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி ஐ.பி.எல் தொடரில் அசைக்க முடியாத இரு ஜாம்பவான் அணியாக இவ்விரு அணிகளும் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement