தோனி எனக்கு சப்போர்ட் பண்ணாரு தான். ஆனா அது எதுக்காக தெரியுமா ? – யுவ்ராஜின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரெய்னா

Raina-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் யுவராஜ் சிங். சச்சின், கங்குலி, தோனி ஆகியோர்களை போன்று இவருக்கு என உலகளவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இன்றுவரை உள்ளது. அதிரடி வீரரான இவர் இந்திய அணியில் தனது இளமைக் காலத்திலேயே இடம் பெற்று நீண்ட வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வெற்றி பெற்ற உலக கோப்பையில் இவரது பங்கு அசாத்தியமானது என்றால் அது மறுக்க முடியாத உண்மைதான்.

YuvrajSingh

பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்திய இவர் இரண்டு முறை உலகக் கோப்பையிலும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டவர். இந்நிலையில் கடந்த மாதம் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவராஜ் இந்திய அணியில் தனது கடினமான காலம் குறித்து மனம் திறந்து பேசினார். அதில் 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் தான் சேர்க்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசினார்.

- Advertisement -

அந்த உலகக்கோப்பை தொடரின் தேர்வு குறித்து பேசிய அவர் : தனக்கு பதிலாக ரெய்னாவிற்கு பெரிய அளவு ஆதரவு இருந்ததாகவும் ஆனால் நான் அப்போது நன்றாக விளையாடிக் கொண்டிருந்ததால் என்னை வேறு வழியின்றி அணியில் சேர்த்தார்கள் என்றும் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு வீரரை தனிப்பட்ட முறையில் பிடிக்கும் அந்த வகையில் சுரேஷ் ரெய்னா விற்கு கேப்டன் தோனியின் ஆதரவு பெருமளவில் இருந்தது என்றும் கூறினார்.

Raina

எனவே தோனிக்கு பிடித்தமான வீரரான ரெய்னாவை அணிக்கு கொண்டுவரவே தோனி விருப்பம் காட்டினார் என்றும் வெளிப்படையாக தனது கருத்தினை கூறியிருந்தார். மேலும் அதே சமயத்தில் தானும், யூசப் பதான் ஆகியோரும் நன்றாக விளையாடி வந்ததாகவும், ஆனால் தான் பேட்டிங் மற்றும் பவுலின் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதால் ரெய்னாவிற்கு பதிலாக எனக்கு வேறு வழியின்றி அணியில் வாய்ப்பு கிடைத்தது என்றும் யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது யுவ்ராஜின் இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள சுரேஷ் ரெய்னா கூறுகையில் : ஆமாம் தோனியின் ஆதரவு எனக்கு கண்டிப்பாக இருந்தது. அதனை நான் மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. ஏனென்றால் என்னிடம் திறமை இருக்கிறது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். மேலும் அவர் என்னுடன் நட்பு பாராட்டினாலும் என்னுடைய திறமை மீது அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்திய அணியாக இருந்தாலும் சரி, சிஎஸ்கே அணியாக இருந்தாலும் சரி இதே நிலைமைதான். தோனி எப்போதும் ஒரு வீரருக்கு 2 வாய்ப்புகளை கொடுப்பார் அவ்வாறு வாய்ப்புகளை கொடுக்கும் போதே சரியாக விளையாடவில்லை என்றால் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார். அந்த வகையில் நானும் தோனியிடம் இரண்டு வாய்ப்புகளை கேட்டுப் பெற்று மேலும் அந்த வாய்ப்புகளின் மூலம் என்னுடைய திறமையை நிரூபித்து தோனிக்கு பிடித்தவராக திகழ்ந்தேன் என்றும் ரெய்னா கூறியுள்ளார்.

Raina

மேலும் தொடர்ந்து பேசிய ரெய்னா : உங்களுக்கே (யுவ்ராஜ்க்கு) நன்றாக தெரியும். மிடில் ஆர்டரில் பேட்டிங் விளையாடுவது எளிதல்ல. களமிறங்கினால் 10 முதல் 15 ஓவர்கள் வரை ஆடவேண்டும். சில நேரங்களில் 30 ஓவர்கள் கூட ஆட நேரிடும். அத்துடன் பவுலிங்கிலும் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். மேலும் 15 முதல் 20 ரன்களை பீல்டிங்கில் சேமித்து கொடுக்க வேண்டும் இதெல்லாம் கடினமான ஒன்றுதான். ஆனால் சவாலான இந்த போட்டி எனக்கு பிடிக்கும் அதை நான் நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன் என்று யுவராஜுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரெய்னா.

Advertisement