நீங்க நெனைக்குற மாதிரி தோனி தல கிடையாது – சுரேஷ் ரெய்னா யாரை சொல்லி இருக்காரு பாருங்க

raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக அவர் ஆடி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது மூன்று ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பயிற்சியில் கலந்து கொண்டார்.

Raina

நேற்று முன்தினம் அவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இவ்வாறு வாழ்க்கையை செம்மையாக நடத்திக்கொண்டிருக்கிறார் சுரேஷ் ரெய்னா. மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் பிரபல டிவி சேனல் ஒன்று தல அஜித் அவர்களது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றுவது. அதை சுரேஷ் ரெய்னா லைக் செய்து அஜித் ரசிகர் என்பதை காட்டியுள்ளார்.

Priyanka raina

மேலும் அவர் லைக் செய்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் ரெய்னா அவரே தனக்கு பிடித்த நடிகராக அஜித்தை லைக் செய்துள்ளதால் அவரே நம்ம தலையை ஏற்றுக்கொண்டார் என்று ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அதே நேரத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹிமா குரேஷி இவருக்கு இணையான ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ajith

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி வருவதால் இங்குள்ள நடிகர்களை பற்றி ரெய்னாவிற்கு தெரியும். மேலும் தல என்பதன் அர்த்தமும் அவருக்கு தெரியும் அதுமட்டுமின்றி ரெய்னாவை ரசிகர்கள் சின்ன தல என்றும் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.