தற்போதைய இந்திய அணியில் என் கவனத்தை ஈர்த்த 4 திறமையான இளம்வீரர்கள் இவர்கள்தான் – ரெய்னா ஓபன்டாக்

Raina
- Advertisement -

இந்திய அணி முதன்மை வீரர்களுடன் தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு அணியானது தற்போது இலங்கை சென்று அந்நாட்டிற்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த தொடர் துவங்க உள்ள நிலையில் தற்போது இந்த புதிய இந்திய அணியில் தன்னை மிகவும் கவனம் ஈர்த்த நான்குபேர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது மனம்திறந்து பேசியுள்ளார்.

IND

- Advertisement -

இந்த இலங்கை தொடரில் பல இளம் வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தான் கருதும் தனது கவனத்தை ஈர்க்க 4 வீரர்கள் குறித்து ரெய்னா பேசுகையில் : முதல் வீரராக தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு அடுத்து சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாடை தேர்வு செய்த அவர் கெய்க்வாட் ஒரு கன் பிளேயர் என்றும் கூறியுள்ளார். அதற்கடுத்து தற்போது இங்கிலாந்து தொடரில் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை இலங்கை தொடரில் நிரப்பவேண்டும் என்றால் அது அக்சர் பட்டேலால் தான் முடியும் என்றும் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவித்து உள்ளார்.

axar

அதுமட்டுமின்றி 4-வது வீரராக சிராஜை தேர்வு செய்துள்ளார். சிராஜ் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் அவர் அசத்தலான பவுலிங்கை சமீபத்தில் வெளிப்படுத்தி வருகிறார் என்றும் இது போன்ற இளம் வீரர்களின் முன்னேற்றத்திற்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தனது கவனத்தை ஈர்த்தது (படிக்கல், கெய்க்வாட், அக்சர் படேல், சிராஜ்)இந்த 4 வீரர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

Siraj

டிராவிட்டால் தான் இளம்வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்து வருகின்றனர். ஏனெனில் ராகுல் டிராவிட் மூலம்தான் இந்த இளம் வீரர்கள் தங்களை மெருகேற்றிக்கொண்டு அணியில் நுழைகிறார்கள் என்றும் ராகுல் டிராவிட்டை பாராட்டியுள்ளார். டிராவிட்டின் தலைமையில் கில், ப்ரித்வி ஷா, அகர்வால், சிவம் மாவி, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், சிராஜ் போன்றோர் வளர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement