காலில் ஆப்ரேஷன் செய்து நெதர்லாந்தில் ஆஸ்பிடலில் இருக்கும் ரெய்னா – காரணம் இதுதான்

Raina
- Advertisement -

இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். அதனால் உள்ளூர் போட்டிகளில் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார்.

Raina

அவருக்கு கடந்த சில நாட்களாகவே இடது முழங்காலில் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மேலும் அந்த இடத்தில் அவர் முழு செயல்பாடு சரியில்லை என்று தெரியவந்ததால் அவர் தனது முழங்கால் பகுதிகளில் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய நெதர்லாந்து சென்றார்.

- Advertisement -

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து காயம் சரியாக 1 அல்லது 1.5 மாதங்கள் வரை ஆகும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement