மீண்டும் இந்திய அணியை வழிநடத்த போகிறார் ரெய்னா !

raina-dhoni
- Advertisement -

வரும் மார்ச் மாதம் முதல் இந்தியா,இலங்கை,வங்கதேச அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

suresh-raina

- Advertisement -

மார்ச் 6ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதிவரையில் நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் திருவிழா இலங்கையின் சுதந்திரமடைந்த 70ஆம் ஆண்டின் நினைவாக நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் முதல்போட்டியானது இந்தியா–இலங்கை அணியிடையே நடைபெறுகின்றது. இறுதிப்போட்டியானது 18ம் தேதி நடைபெறவுள்ளது.

suresh-raina

தொடர்ந்து ஓய்வின்றி பலதொடர்களில் கோலி விளையாடி வருவதால் இந்த தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் மேலும் சில சீனியர் வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டு இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விராட்கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்று தெரிகின்றது.

Advertisement