சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியதில் ஏற்பட்டுள்ள பரபரப்பு திருப்பம். வீட்டில் நடந்துள்ள கொலை – அதிர்ச்சி தகவல் இதோ

Raina-1

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

csk 1

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21ம்தேதி தங்களது ஒட்டுமொத்த அணியுடனும் துபாய் சென்றது. ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் யார் யார் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த செய்தி சென்னை அணிக்கு ஏற்பட்ட முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பாதிப்பின் நிலையே தெரியாததுக்கு முன்னர் அதற்கு அடுத்த அடி சென்னை அணிக்கு தற்போது விழுந்துள்ளது.

அது யாதெனில் இந்த தொடரில் பங்கேற்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் ரெய்னா சொந்த குடும்ப வேலைகள் காரணமாக இந்தியா திரும்பியதாக சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகிகள் விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் :

- Advertisement -

Priyanka raina 1

தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் இது போன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியதற்கான காரணத்தை jagran என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதன்படி பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் ரெய்னாவின் தந்தையுடைய சகோதரியான ஆஷா தேவி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த குடும்பத்தின் மீது தற்போது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரெய்னாவின் மாமா அசோக்குமார் உயிரிழந்து விட்டார் என்றும் அவரது அத்தை உஷாதேவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களுடைய இரண்டு மகன்களும் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர்.

Raina

அதுமட்டுமின்றி 80 வயதான அசோக் குமாரின் தாயாரும் இந்த தாக்குதலில் காயமடைந்து உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் குற்றவாளிகள் யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பிரச்சனைகள் காரணமாகவே சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பி உள்ளதாக அந்த தகவல் அந்தக் குறிப்பிட்ட நாளிதழ் தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.