சி.எஸ்.கே என்ற சகாப்தம் உருவாக இவரே காரணம். வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்த – சின்ன தல ரெய்னா

Raina
- Advertisement -

இந்தியனின் முன்னாள் வீரரான வி பி சந்திரசேகர் மறைவை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு கிரிக்கெட் துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் அவரது அவர் சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டதாவது : சந்திரசேகரின் இறப்பு சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிஎஸ்கே என்கிற அணி உருவாக சந்திரசேகரர் அமைத்த கட்டமைப்பை காரணம். மேலும் அவர் எங்களுக்கு அளித்த ஊக்கமும், துவக்கம் இன்னும் மறக்கமுடியாதது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தமிழக வீரரான வி.பி சந்திரசேகர்(வயது 57) நேற்று இரவு தனது மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிட தக்கது.

மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளர், பயிற்சியாளர் மற்றும் டி.என்.பி.எல் அணி உரிமையாளர் போன்ற பல கிரிக்கெட் தொடர்பான பணிகளை செய்து வந்தார். 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் மகேந்திர சிங் தோனி முதன்முதலில் சென்னை அணிக்கு பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் சந்திரசேகர் என்பது நினைவுகூரத்தக்கது.

Advertisement