தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடத்திலேயே ரெய்னாவும் ஓய்வை அறிவிக்க இதுவே காரணம் – விவரம் இதோ

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று இரவு 19:29 மணியளவில் தனது ஓய்வை அறிவித்தார். கடந்த ஓராண்டாக ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக இருந்த அவரது ஓய்வு குறித்து நேற்று மனம் திறந்து தோனி அறிவிக்க ரசிகர்களுக்கு அது பெரும் வேதனையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அடுத்த அடியாக தோனி ஓய்வு பெற்ற சிலமணி நேரத்திலேயே ரெய்னாவும் தனது ஓய்வு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். தான் பதிவிட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் : உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எப்போதும் உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது.

- Advertisement -

முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன். உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவிற்காக விளையாடுவதில் பெருமை. நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டு உள்ளார். தோனி ஓய்வு முடிவை அறிவித்த சிலமணி நிமிடங்களிலேயே ரெய்னாவும் அறிவிக்க காரணம் யாதெனில் :

கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமின்றி வெளியிலேயும் அவர்கள் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே. ரெய்னா தனது கேரியரில் பல போட்டிகளை தோனியின் தலைமையில் ஆடியுள்ளார். மேலும் தோயோனியின் மிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் அவரது அணியில் சுரேஷ் ரெய்னா திகழ்ந்தார்.

ரெய்னாவிற்கு எப்பொழுதும் தனது ஆதரவை வழங்கி வந்த தோனியை அவருக்கு முன்னோடியாக ரெய்னா எப்போதுமே பார்த்து வருகிறார். அதேபோன்றுதான் சிஎஸ்கே அணியிலும் இவர்கள் இருவரும் மிகப் பெரிய தூண்களாக பார்க்கப்படுகின்றனர். தோனி மீது தான் வைத்திருக்கும் அபிப்பிராயம் மற்றும் நட்பின் அடையாளமாக தான் தலைவனாக பாவிக்கும் அவரது வழியிலேயே தானும் ஓய்வை அறிவித்துள்ளார்.

Advertisement