அடப்பாவமே ராகுல் இப்போ என்ன செய்றார் பாருங்க. விட்ட இடத்தை பிடிக்காம விடமாட்டாரு போல – விவரம் இதோ

Rahul
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராகுல் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவில்லை. அதனால் அவர் இந்தியா திரும்பியுள்ளார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய ரசிகர்கள் பலரும் டெஸ்ட் அணிக்கு நிச்சயம் ராகுல் தேவை என்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த பல தொடர்களாக தனது உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.

Rahul

- Advertisement -

தற்போது ராகுல் எந்த வடிவத்திலும் எந்த அணிக்கு எதிராகவும் ரன்களை குவித்து வருகிறார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. t20 போட்டியில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். இந்நிலையில் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இந்தியா திரும்பியுள்ள ராகுல் கர்நாடக அணிக்காக ரஞ்சிப் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிசிசிஐ வேண்டுகோளுக்கிணங்க அவர் காலிறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன்பிறகு தற்போது பெங்கால் அணிக்கு எதிராக விளையாடும் பெங்களூர் அணிக்காக அரையிறுதிப் போட்டியில் விளையாட 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து சென்று திரும்பிய பிறகு ஓய்வு எடுத்தாலும் மணிஷ் பாண்டே காலிறுதி போட்டியில் விளையாடினார் தற்போது அவருடன் இணைந்து ராகுலும் அரையிறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார்.

Rahul

இதற்கு முக்கிய காரணம் யாதெனில் டெஸ்ட் அணியில் தான் விட்ட இடத்தை பிடிப்பதற்காக இந்த தொடரின் மூலம் தனது திறமையை நிரூபிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதைய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா என்று பல்வேறு துவக்க வீரராக இருந்தாலும் ஏற்கனவே தான் டெஸ்டில் விளையாடிய இடத்தை பிடிப்பதற்காக தற்போது ரஞ்சி போட்டியில் தந்து திறமையை நிரூபிக்க காத்திருக்கிறார்.

Rahul

இந்திய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் ஐந்து சதம் மற்றும் பதினொரு அரை சதங்களும் அடித்துள்ளார். ஆனால் கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் என அடித்ததால் அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய வரும் ராகுல் நிச்சயம் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement