INDIA : தவானுக்கு பதிலாக இவரே இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்குவார்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Dhawan
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Dhawan

இந்நிலையில் காயமடைந்த தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்ல உள்ளார். ஆனாலும் பண்ட் மாற்று வீரராக அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது. ரோகித் மற்றும் தவான் சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தவானுக்கு பதிலாக ரோகித் உடன் ராகுல் களம் இறங்கி விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ராகுல் தொடக்க வீரராக பல போட்டிகளில் ஆடியுள்ளார். எனவே அந்த அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்பதால் ராகுல் இந்திய அணியின் துவக்க வீரராக களம் இறங்குவார்.

Rahul

மேலும் நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட்-டை இந்திய அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ மாற்றுவீரராக அறிவித்தால் அவர் நான்காவது இடத்தில் இறங்கவும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement