நீங்கள் அணியில் இல்லாததால் எதையோ இழந்ததுபோல் உள்ளோம் – ராகுல் வருத்தம்

Rahul
- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது நாளை மறுதினம் சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பின்னர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஹார்திக் பாண்டியா துவக்க வீரரான ராகுலை பேட்டி எடுத்தார். காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் பாண்டியா போட்டியை பார்ப்பதற்காகவும், வீரர்களை உற்சாகப்படுத்தவும் மும்பை மைதானம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது பாண்டியா பேட்டி எடுக்கையில் நீங்கள் விளையாடும் விதத்தை பார்த்த போது ஒரு பேட்டை எடுத்துக்கொண்டு உள்ளே வந்து ரசிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று பாண்டியா கூறினார். உடனே அதற்கு பதில் அளித்த ராகுல் நீங்கள் விரைவாக திரும்பி வருவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் இல்லாமல் டிரெஸ்ஸிங் ரூம் காலியாக இருப்பதாக உணர்கிறோம் என்று ராகுல் பதில் அளித்தார்.

pandya rahul

இவர்களின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் வீரர்களான ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என ஏற்கனவே நாம் அறிந்ததே. ஏற்கனவே சென்ற ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு பேட்டியின்போது பெண்கள் குறித்த தவறான கருத்தை தெரிவித்ததால் இருவரும் சில மாதங்கள் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Pandya

அதன் பின்னர் இந்திய அணிக்கு திரும்பிய இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். காயம் காரணமாக பாண்டியா ஓய்வில் இருக்க தற்போது ராகுல் இந்திய அணியில் துவக்க வீரராக சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement