பி.சி.சி.ஐ யின் அனுமதியோடு காதலியை இங்கிலாந்துக்கு அழைத்து சென்றுள்ள இந்திய வீரர் – யார் தெரியுமா ?

IND

இந்திய அணி முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை விளையாடியது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

IND

கிட்டத்தட்ட 3 மாதங்கள் கொண்ட இந்த பெரிய தொடருக்காக பிசிசிஐ வீரர்கள் மற்றும் அவர்களது மனைவி, குழந்தைகள் மற்றும் அவர்களது பார்ட்னர் யாரேனும் இருந்தால் அவர்களுடன் இந்த பெரிய தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கியது. அதன்படி இந்திய வீரர்கள் தங்கள் உடன் வரும் நபர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று என்று கூறியிருந்தது. அதன்படி வீரர்கள் தங்களது மனைவிகள் குழந்தைகள் என அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான ராகுல் தான் காதலிப்பதாக வதந்தி பரப்பப்படும் அதியா ஷெட்டியுடன் இங்கிலாந்து சென்று உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து இந்திய அணி புறப்படும்போது கடந்த மாதம் வீரர்களுடன் யார் யார் செல்கிறார்கள் என்ற விவரம் சரிபார்க்கப்பட்டது. அதில் ராகுல் அதியா ஷெட்டி தனது பார்ட்னர் என்று கூறி இங்கிலாந்து அழைத்துச் சென்றுள்ளார் ராகுல்.

athiya 3

இதனால் அதியா ஷெட்டியும் தற்போது இந்திய அணியுடன் பயோபபுளில் இங்கிலாந்தில் உள்ளார் என்ற நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் காதலில் இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாக தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதியா ஷெட்டி அங்கு சென்றுள்ளதும், அதுமட்டுமின்றி அதியாவின் சகோதரரான அஹானுடன் ராகுல் இங்கிலாந்தில் உலாவரும் புகைப்படங்கள் ராகுலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@rahulkl)

இதன் காரணமாக ராகுல் அவரது காதலி அதியா ஷெட்டி மற்றும் அவர் சகோதரர் உடன் இங்கிலாந்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இருவரும் தாங்கள் காதலிக்கவில்லை என்றும் நல்ல நண்பர்கள் என்று கூறி வந்த நிலையில் தற்போது பார்ட்னர் என்று இங்கிலாந்துக்கு ராகுல் அதியாவை அழைத்து சென்றுள்ளதால் அவர்களின் காதல் உறுதியாகியுள்ளது.

Advertisement