சின்னதா ஏதாவது பண்ணாக்கூட தோனியை நியாபகப்படுத்துறாங்க. இது ரொம்ப கஷ்டம் – மனம்திறந்த ராகுல்

- Advertisement -

இந்திய அணிக்கு கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை விக்கெட் கீப்பராக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச அளவில் சிறந்த விக்கெட் கீப்பிங் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அவர். தற்போது வரை அவருக்கு இணையாக எந்த ஒரு விக்கெட் கீப்பரும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம். விக்கெட் கீப்பிங்கில் அவரது துல்லியம் இன்னும் யாருக்கும் வரவில்லை. அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் விக்கெட் கீப்பிங்கில் அவருக்கே உரித்தான விடயமாக இருக்கிறது.

dhoni

- Advertisement -

மேலும், அவரது இடத்தை இந்திய அணியில் நிரப்புவது மிகப் பெரிய காரியம். தற்போது டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும், இந்திய அணி அவருக்கான மாற்று வீரரை தேட கடுமையாக உழைத்து வருகிறது. ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் என பலரை முயற்சி செய்து தோல்வி அடைந்து.

இறுதியில் பேட்ஸ்மேனாக இருந்த கேஎல் ராகுலை தற்காலிக விக்கெட் கீப்பராக வைத்துள்ளது இந்திய அணி. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல்.
இதன் காரணமாக அவரை நிரந்தர விக்கெட் கீப்பராக நியமிக்கலாம் என விராட் கோலி முடிவு செய்துள்ளார். இவை குறித்து தற்போது கேஎல் ராகுல் பேசியுள்ளார். அவர் கூறுகையில் :

Rahul

இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்யும் போது எப்போதும் பதட்டமாக இருக்கும். ஏனெனில் ரசிகர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். உடனடியாக டோனியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். தோணி போன்ற ஒரு ஜாம்பவான் இடத்தை மற்றொரு வீரர் நிரப்புவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். களத்தில் சிறிய தவறினை நாம் விக்கெட் கீப்பிங்கில் செய்தால் கூட உடனே ரசிகர்கள் தோனியை நியாபகப்படுத்துகிறார்கள். அந்த அளவிற்கு தோனி ரசிகர்களின் தலைவனாக இருக்கிறார்.

Rahul

நான் தொடர்ச்சியாக கர்நாடக அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறேன்..இந்திய அணிக்கு முழுநேரமாக இதனையே செய்ய நேர்ந்தாலும். அந்தப் பொறுப்பையும் ஏற்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கேஎல் ராகுல். ஆனாலும் தோனியின் இடத்தை ஒருநாள் இரவிலேயே அடைந்திட முடியாது. அவரைப்போன்று அனுபவம் கிடைக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement