நான் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை ஜெயிக்க வைக்க இதுவே காரணம் – ஆட்டநாயகன் ராகுல் பேட்டி

Rahul-5
- Advertisement -

ஆக்லாந்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் 50 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

rahul 3

- Advertisement -

முதல் போட்டியில் 27 பந்துகளில் 56 ரன்களை குவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் கேஎல் ராகுல் கூறுகையில் :ஆக்லாந்து மைதானம் முதல் போட்டியில் இருந்தது போல இல்லை. சிறிது கடினமாகவும் பந்துகள் மெதுவாகவும் வந்தன.

சூழலும் வித்யாசமாக இருந்தது, டார்கெட்டும் வித்தியாசமாக இருந்தது அதுமட்டுமின்றி ஆடுகளமும் மாறிவிட்டதால் எனது ஆட்டத்தில் சிறிது மாற்றத்தை செய்தேன். அதுமட்டுமில்லாமல் எனக்கு பொறுப்புகள் இந்திய அணியில் அதிகரித்துவிட்டன. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விரைவாக ஆட்டம் இழந்து விட்டால் நான் நின்று விளையாடி ஆட்டத்தை முடித்து வைத்தேன். ஆட்டத்தின் சூழலை புரிந்துகொண்டு நான் விளையாடுவது எனக்கு சிறப்பாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

rahul 4

இவ்வாறு புரிந்து கிரிக்கெட் விளையாடுவதால் நான் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது. எப்போதுமே அணியைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல என்ன தேவையோ அதை நான் வழங்க முடியுமென்றும் அதைத்தான் செய்து வருகிறேன் என்றும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement