தனது காதல் மற்றும் காதலி பற்றி முதன்முறையாக வாய் திறந்த – ராகுல்

Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கே எல் ராகுல் ஹிந்தி திரைப்பட உலகின் நடிகையான அகன்ஷா ரஞ்சன் உடன் காதல் வயப்பட்டு உள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் சில மாதங்களாக சுற்றிக் கொண்டு வருகின்றது.

Rahul 1

- Advertisement -

இந்நிலையில் பாலிவுட் ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரை ராகுலின் காதலி அகன்ஷா ராகுலுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த புகைப்படங்களையும் ராகுலின் காதலி வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக தனது காதல் மற்றும் காதல் குறித்து இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் தனது கருத்தினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : கடந்த சில மாதங்களில் நான் வாழ்க்கையை மிகவும் நன்றாக கற்றுக் கொண்டேன். எதை எந்த இடத்தில் பேச வேண்டும் எந்த இடத்தில் எந்த செயலை செய்ய வேண்டும் போன்ற பல விடயங்களை நான் கற்றுக் கொண்டேன்.

இப்பொழுது என்னுடைய காதல் குறித்த விவகாரம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் இது குறித்து நான் பேப்பரிலும் படிக்கவில்லை எந்த ஊடகத்திலும் எதையும் கேள்விப்படவில்லை. இருப்பினும் என்னை சுற்றி இந்த கேள்வி சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நான் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

KL-Rahul

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்னுடைய விருப்பம் ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை கூட நான் நடந்தால் வெளிப்படையாக உங்களுக்கு தெரிவிப்பேன். அது வரை வதந்தியான செய்திகளை பரப்ப வேண்டாம் உண்மை இருந்தால் நானே உங்களிடம் வெளிப்படையாக சொல்கிறேன் என்று ராகுல் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement