நான் அடிக்கடி இப்படி செய்வது கிடையாது. ஆனாலும் எனக்கு பாராட்டு கிடைக்கிறது – ஆட்டநாயகன் ராகுல் பேட்டி

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 340 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவன் 96 ரன்களையும், இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 80 ரன்களை குவித்தனர்.

dhawan 3

- Advertisement -

அதன்பிறகு 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமன்செய்து உள்ளது. ஸ்மித் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா தவிர மற்ற அனைவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய ஆட்ட நாயகன் ராகுல் கூறியதாவது : இந்திய அணியில் எனக்கு வெவ்வேறு பேட்டிங் பொசிஷன்கள் மற்றும் பொறுப்புகள் தரப்படுகிறது. அதை நான் அனுபவித்து விளையாடுகிறேன். ஐந்தாவது வீரராக இந்த போட்டியில் களம் இறங்கியதால் சில பந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் கோலி கூறியதுபோல பந்து பேட்டிற்கு அருமையாக வந்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது.

Rahul

என்னுடைய ஆட்டம் கடந்த சில மாதங்களாக சிறப்பாக உள்ளது. என்னுடைய திறனை நான் சரியான பார்ட்னர்ஷிப் மூலம் கொண்டு செல்கிறேன் என்று நினைக்கிறேன். அதேபோன்று குல்தீப் என்னுடைய கீப்பிங் நன்றாக இருக்கிறது என்று கூறினார். நான் அடிக்கடி கீப்பிங் செய்வது கிடையாது. ஆனால் கர்நாடக அணிக்காக கடந்த சில வாரங்கள் நான் கீப்பிங் செய்துள்ளேன் தற்போது அந்த அனுபவமே ஓரளவு சிறப்பாக என்னால் கீப்பிங் செய்ய முடிகிறது என்றும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement