இன்று சிறப்பாக விளையாடவும், சதம் அடிக்கவும் இதுவே காரணம் – ராகுல் பேட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் என்ற இமாலய ரன்குவிப்பின் மூலம் அசத்தியது.

Ind

துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் சதம் அடித்து அருமையானது துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்து அசத்தியது. ஒருநாள் போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தை நிறைவு செய்த ராகுல் 104 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் போட்டியின் இடையில் தனது ஆட்டம் குறித்து பேசிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் கூறியதாவது : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நான் சிறப்பாக ஆடி வருகிறேன் என்று நினைக்கிறேன். அணிக்காக எனது ரன் குவிப்பை தருவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. என்னுடைய ரன்குவிப்பு மற்றும் பார்மை இப்போது நான் சரியான பாதைக்கு மாற்றிவிடுகிறேன்.

Rahul

துவக்க வீரராக களமிறங்க தற்போது எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது என்றே நான் கூறுவேன். ஏனெனில் துவக்க வீரராக என்னால் சிறப்பாக ஆட முடியும் என்று நான் கருதுகிறேன். என்னுடைய மனநிலையை தெளிவாக வைத்துக் கொண்டேன் என்னுடைய பங்களிப்பு என்ன என்பதை நான் புரிந்து விளையாடினேன். இன்றைய நாள் எனது நாளாக அமைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி என்று ராகுல் கூறினார்.

- Advertisement -