இந்திய அணி இந்த மேட்டரில் ரொம்ப வீக் தான். ஆனால் அதனை நாங்கள் சரிசெய்து வருகிறோம் – ராகுல் ஓபன் டாக்

Rahul

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Rahul-1

இந்த தொடரில் தவான் காயம் காரணமாக விலகியதையடுத்து டி20 போட்டிகளில் ராகுல் மீண்டும் துவக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இந்த தொடரை அருமையாக பயன்படுத்திய ராகுல் ஓபனராக தனது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடர் முழுதும் வெளிப்படுத்தினார்.

முதல் போட்டியில் அரைசதம் அடித்த ராகுல் இறுதிப்போட்டியான இந்தப் போட்டியிலும் 91 ரன்களை குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்த தொடரில் 163 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார். இந்நிலையில் நேற்று போட்டி முடிந்தவுடன் பேட்டி அளித்த ராகுல் கூறியதாவது : இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் கோலி ஆகியோர் அடித்து நொறுக்கும் நோக்கத்துடனேயே பேட்டிங் செய்தார்கள்.

Rahul

இந்த தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உலக கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டி ஆகும். மேலும் முதலில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது இந்திய அணியிடம் சிறந்த ரெக்கார்டு இல்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இன்று அதனை மாற்றுவதற்கான சரியான வாய்ப்பாக நாங்கள் இந்த போட்டியினை கருதினோம்.

- Advertisement -

Rahul-1

அதன்படி முதலில் பேட்டிங் செய்யும்போதும் சிறப்பாக ஆடமுடியும் என்பதை நிரூபித்துள்ளோம். இனி வரும் காலங்களில் முதலில் பேட்டிங் செய்தாலும் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்பதற்கு இந்த போட்டி ஒரு உதாரணமாக அமையும். எனவே இந்த ஆட்டத்தை அப்படியே எடுத்துச் செல்ல நினைக்கிறோம். மேலும் இனிவரும் ஒவ்வொரு போட்டிகளின் முடிவுகளும் முக்கியம் என்பதால் இனி வரும் போட்டிகளிலும் கவனம் செலுத்துவோம் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.