நாளைய போட்டியில் கீப்பர் இவர்தான். கன்பார்மே பண்ணிட்டாங்க – இதை பாத்தா நீங்களே ஆமான்னு சொல்லுவீங்க

Ind
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார்கள் என்ற சந்தேகம் தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த பண்டிற்கு பதிலாக இரண்டு போட்டிகளில் ராகுல் கீப்பிங் செய்தார்.

திடீர் வாய்ப்பினை பெற்ற ராகுல் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்த கேப்டன் விராட் கோலியும் அவரைத் தொடர்ந்து கீப்பராக சோதிக்க உள்ளோம் என்று ஓப்பனாக கூறியிருந்தார். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அந்த கருத்தை முன்வைத்தால் இந்த தொடரில் ராகுல் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைய பயிற்சியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் சைனி ஆகியோர் பந்துவீச ராகுல் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டார்.

இந்தப் பயிற்சி வீடியோவினை வைத்துப் பார்க்கும்போது நாளைய போட்டியில் ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மற்ற வீரர்கள் அனைவரும் பேட்டிங் பயிற்சி மற்றும் பந்துவீச்சு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க ராகுல் அதிக நேரம் கீப்பிங் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதும் அதனை ரசிகர்கள் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement