சாரிப்பா என்னால் உங்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற முடியவில்லை -இந்தியவீரர் உருக்கம்

Ragul
- Advertisement -

ராகுல் சர்மா நியூ டெல்லியைச் சேர்ந்த வீரர் ஆவார். 2006ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். ராகுல் சர்மா இடது கை லெக் ஸ்பின்னர் ஆவார். 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது ஐபிஎல் பயணத்தை ராகுல் சர்மா தொடங்கினார் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 2010ஆம் ஆண்டு ஆட ஆரம்பித்தார். தொடக்க தொடரிலேயே 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரிடமிருந்தும் நற்பெயரை பெற்றுக்கொண்டார்.

Ragul 1

- Advertisement -

பின்னர் இந்திய அணி இருந்து இவருக்கு வாய்ப்பு வந்தது 2011ம் வருடம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் டி20 மேட்சுகள் விளையாட இவருக்கு இந்திய அணி அழைப்பு விடுத்தது. நன்றாகப் போய்க்கொண்டிருந்த ராகுல் சர்மா என் வாழ்க்கையில் 2012ஆம் வருடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

2012ஆம் வருடம் ராகுல் சர்மா ஒரு பார்ட்டியில் போதை எடுத்துக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தது. பின்னர் வழக்கு விசாரணை போய்க்கொண்டிருந்த நிலையில் இவர் போதை எடுத்துக்கொண்டது உறுதியானது.அப்போது சவரக் உங்களை இவர் தெரியாமல் இந்த விஷயத்தில் மாற்றிக் கொண்டார் என்று இவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினார். மேலும் இவரை இந்திய அணி தடை செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

Ragul 2

இருப்பினும் இந்திய அணி இவரை கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார் 2014ஆம் ஆண்டு கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இவர் ஆடியதே இவரது கடைசி ஐபிஎல் போட்டி ஆகும். ராகுல் சர்மா மொத்தமாக 44 ஐபிஎல் போட்டியில் விளையாடி 40 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார், இவரது எக்கானமி 7.02 ஆகும். இந்திய அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும், 2 டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் கொரோனா காரணமாக சமீபத்தில் இவரது தந்தை உயிரிழந்தார்.இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் சர்மா எனது தந்தையை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் எனக்கு ஒரு தந்தையாக இல்லாமல் ஒரு நண்பராக இருந்தார். எனது வாழ்க்கையில் விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் இப்படி அனைத்தும் உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.

உங்களை கொரோனாவில் இருந்து என்னால் காப்பாற்ற இயலவில்லை இருப்பினும் நீங்கள் எனக்கு சொன்ன வார்த்தைகள் மற்றும் சொன்ன கடமைகளை நான் என்றும் காப்பாற்றுவேன் என்று கண்ணீர் மல்க பதிவிட்டிருந்தார்.

Advertisement