இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் கிரிக்கெட் களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுமட்டுமன்றி களத்திற்கு வெளியேயும் தனது ஃபிட்னஸ் மற்றும் டேட்டூ, ஆடம்பர வாழ்க்கை என அவர் செய்யும் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சில மாதங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்தினை பேசியதன் மூலம் இந்திய அணியில் இருந்து சில மாதம் நீக்கப்பட்ருந்தது ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எனவே இவருக்கும் அதியா ஷெட்டிக்கும் காதல் மலர்ந்து விட்டதோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகைகளுக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கும் காதல் என்பது புதிதல்ல ஏற்கனவே பல வீரர்கள் பாலிவுட் நடிகைகளுடன் இதுபோன்று கிசுகிசுக்கப்பட்டு உள்ளது. எனவே இதுவும் உண்மையா ? என்பது போல இந்த புகைப்படம் வைரல் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.
அதியா ஷெட்டி பிரபல ஹிந்தி நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுனில் ஷெட்டி தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.