- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சினுக்கு அடுத்து இந்திய ரசிகர்கள் இவரைப்பார்த்து தான் பிரமித்து நிற்கிறார்கள் – ராகுல் ஓபன் டாக்

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராகுல் டி20 போட்டிகளில் துவக்க வீரராகவும் ஒருநாள் போட்டிகளில் நடுவரிசை வீரராகவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ராகுல் தொடக்க வீரராக உறுதியாக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ராகுல் உறுதியாகி விட்டார். அதன்பிறகு நானா ? இல்லை தவானா ? இருவரில் யாரோ ஒருவர் களமிறங்குவோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த வார்த்தைக்கு பதிலளித்த ராகுல் கூறுகையில் : ரோஹித்தின் இந்த வார்த்தைகள் என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்தது.

- Advertisement -

நான் அவரது பேட்டிங்கின் மிகப்பெரிய விசிறி அவருடன் சேர்ந்து சில ஆண்டுகள் விளையாடி விட்டேன். அவரைப்பற்றி பற்றி கூற வேண்டும் என்றால் சச்சினைப் பார்த்து எவ்வாறு அனைவரும் வாயடைத்து போவார்களோ அதேபோன்று ரோகித் சர்மாவின் பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் பிரமித்து நிற்கிறன்றனர்.

என்மீது ரோகித் சர்மா அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். ஒரு மூத்த வீரராக அவர் என்னை ஆதரிக்கும் போது எனக்கு மேலும் நம்பிக்கை பிறக்கிறது. இந்த தருணத்தில் அவர் எனக்காக பேசி என்னுடன் நின்றிருக்கிறார், இது எனக்கு ஒரு மகிழ்ச்சியான விடயம் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு வீரர் மற்றொரு இளம் வீரர் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு ஆதரவு அளிக்கும் போது நம்முடன் இருக்கும் திறமை நிச்சயம் வெளிப்படும்.

என்னுடைய ஆட்டம் தற்போது சீராகி உள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு நான் வித்தியாசமாக விளையாடி வருவதாக உணர்கிறேன். நான் சுயநலமாக ஆடும் போது என்னால் சரியாக ஆட முடியவில்லை. அதன்பிறகு அணிக்காக ஆட முடிவெடுத்த பின்னர் எல்லாம் இப்போது கைகூடி வந்திருக்கிறது என்றும் ராகுல் கூறினார்.

- Advertisement -
Published by