என்னால முடியாதுனு நினைக்குறாங்க. ஆனா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நான் சாதித்து காட்டுவேன் – ராகுல் சபதம்

Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி பேட்ஸ்மேனாக ராகுல் தற்போது இந்திய அணியில் ஓப்பனிங், மூன்றாவது இடம் மற்றும் ஐந்தாவது இடம் என்று அவ்வப்போது மாறி மாறி விளையாடி வருகிறார். இருப்பினும் எந்த இடத்தில் இறங்கினாலும் அந்த இடத்தில தனது சிறப்பான ஆட்டத்தை அவர் தொடர்ந்து பல தொடர்களாக வழங்கி தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

Rahul

- Advertisement -

மேலும் எந்த ஒரு இடத்தில் இந்திய அணிக்கு இறங்கி விளையாடவும் தான் தயாராக இருப்பதாகவும் நிர்வாகம் என்னை எந்த இடத்தில் ஆட வைக்க நினைக்கிறதோ அந்த இடத்தில் ஆடுவேன் என்றும் ராகுல் ஏற்கனவே பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான பண்டிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக கீப்பிங்கும் செய்து வருகிறார். அதிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் அவர் கூறுகையில் : நான் உண்மையிலேயே விக்கெட் கீப்பர் பணியை விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது இது புதிது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் உள்ளூர் போட்டிகளில் ஏற்கனவே கீப்பிங் செய்துள்ளேன். ஐபிஎல் போட்டிகளிலும் நான் விக்கெட் கீப்பிங் செய்கிறேன் அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்துமுடிந்த விஜய் ஹசாரே போன்ற கோப்பைகளில் கர்நாடக அணிக்காக கீப்பிங் செய்துள்ளேன்.

Rahul

எனவே எனக்கு விக்கெட் கீப்பிங்கில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தெரியும் இப்படி பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விக்கெட் கீப்பராக இருக்கும்போது மைதானம் எப்படி செயல்படும் என்பது தெரியவரும் மேலும் இது குறித்து பவுலருக்கு ஐடியாவும் கொடுக்க முடியும். நான் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்தாலும் விளையாடுவதற்கு போதுமான அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Rahul-1

ஒரு பேட்ஸ்மேனாக ஆடுகளத்தில் நான் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும் ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் நான் அந்த அளவுக்கு விளையாடி இருக்கிறேன் என்றும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement