ராகுல், ரெய்னா சரவெடி..! சாஹல், குல்தீப் மிரட்டல்..! 12.3 ஓவரில் சுருண்டது அயர்லாந்து..! – இந்திய அசத்தல் வெற்றி..!

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஐயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. இந்தியா மற்றும் ஐயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று டப்லின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டடிங்கை தேர்வு செய்தது. பின்னர் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் கோலி கூட்டணியில் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் , கே எல் ராகுளுடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. அதிரடியாக விளையாடிய இந்த கூட்டணியில் ராகுல் 36 பந்துகளில் 70 ரன்களை குவித்தார். மறு புறம் ரெய்னா 45 பந்துகளில் 69 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய பாண்டியாவும் அதிரடியாக 9 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். இறுதியில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது.
William-Porterfield
பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐயர்லாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 70ரன்களை எடுத்திருந்த நிலையில் 12.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.c