பண்ட், சாம்சன் மற்றும் ராகுல் ஆகியோரில் இன்றைய போட்டியின் விக்கெட் கீப்பர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Ind-2
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

IndvsNz

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார்கள் என்ற சந்தேகம் தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த பண்டிற்கு பதிலாக இரண்டு போட்டிகளில் ராகுல் கீப்பிங் செய்தார்.

- Advertisement -

திடீர் வாய்ப்பினை பெற்ற ராகுல் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்த கேப்டன் விராட் கோலியும் அவரைத் தொடர்ந்து கீப்பராக சோதிக்க உள்ளோம் என்று ஓப்பனாக கூறியிருந்தார். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அந்த கருத்தை முன்வைத்தால் இந்த தொடரில் ராகுல் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்றைய பயிற்சியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் சைனி ஆகியோர் பந்துவீச ராகுல் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டார்.

Rahul

இந்த தொடரில் பண்ட் மற்றும் சாம்சன் என இரண்டு விக்கெட் கீப்பர் இருந்தும் ராகுலை கீப்பராக செயல்பட வைத்தால் மேலும் ஒரு பேட்ஸ்மேனை அணியில் இணைக்க முடியும் என்பதால் அதனை சோதிக்கும் விதமாக இன்று ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement