
இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற அவருக்கு பதிலாக அவரது சஹா அவரது இடத்தில் ஆடி வந்தார். ஆனால் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட வரும் தோனிக்கு பதிலாக இந்திய அணி பண்டை அதிகமாக உபயோக படுத்தியது.
ஆனால் அவர் தொடர்ச்சியான சொதப்பலை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் மேலும் சாம்சனுக்கும் சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும் அவரால் ரன் குவிக்க முடியவில்லை இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரின் போது திடீரென விக்கெட் கீப்பிங் வாய்ப்பை பெற்ற ராகுல் அதனை தொடர்ந்து சரியாக செய்து வருவதுடன், பேட்டிங்கிலும் தனது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக தற்போது நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரே விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் பண்டின் இடம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் புதிய வீரர்களை விக்கெட் கீப்பருக்கு தயார்படுத்துவதை விடுத்து ராகுலை தொடர்ச்சியாக விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷராக மாற்றினால் அவர் பெரிய வீரராக வலம் வருவார் என்று சிலரும் கூறுகின்றனர்.
மேலும் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தால் அணியில் இன்னொரு பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் அவருடைய இடம் தொடர்ச்சியாக சோதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் அவரை அடுத்த தோனி ஆகவே பார்த்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் செய்வது அவருக்கு பணிச் சுமையை அதிகபடுத்தும் என்றும் சிலர் கூறுவது குறிப்பிடத்தக்கது.