யார் சொன்னாங்க ராகுல் அவுட் ஆப் பார்முன்னு . இறுதிப்போட்டியில் என்ன பண்ணி இருக்காரு பாருங்க – விவரம் இதோ

Rahul-1
- Advertisement -

இந்த ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று பெங்களூர் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக கேப்டன் மனிஷ் பாண்டே முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Vijay 1

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரரான தேவ்தத் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் சிறப்பாக விளையாடி அவுட்டாகாமல் 52 ரன்கள் எடுத்தார்.

மேலும் கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதாலும், அதன்பிறகு போட்டி நடத்தமுடியாது என்ற காரணத்தினால் டி.ஆர்.எஸ் முறைப்படி கர்நாடக அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடக அணி தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்த போட்டியில் ராகுலின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது.

vijay

இந்திய டெஸ்ட் அணியில் ஃபார்ம் அவுட் என்று கூறப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட ராகுல் அதன் பிறகு விஜய் ஹசாரே கோப்பையின் முக்கியமான நான்கு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அந்த அணி இந்த தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். மேலும் அடுத்த மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெற்றுள்ளதால் நிச்சயம் பங்களாதேஷ் தொடரிலும் சிறப்பாக ஆடுவார் என்று நாம் நம்பலாம்.

Advertisement