இந்திய அணியில் ஒரு டிவில்லியர்ஸ். ரசிகர்களை கவர்ந்த ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ் – வைரலாகும் வீடியோ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 347 ரன்களை குவித்த போதிலும் அதனை எளிதாக சேசிங் செய்த நியூஸிலாந்து அணி 2 ஓவர்கள் மீதம் இருக்கையில் 348 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ராகுலின் சிறப்பான ஆட்டம் தொடர்ந்தது. 5 ஆவது வீரராக களமிறங்கிய ராகுல் 64 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் என 88 ரன்களை குவித்து அசத்தினார். எந்த இடத்தில் இறங்கினாலும் அந்த இடத்திற்கு ஏற்றார்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் குறிப்பாக இந்த போட்டியில் அவர் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரின் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ் அடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் இப்போது அவர் இருக்கும் ஃபார்மில் எந்தவித ஷாட்டையும் ஆட முடியும் என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு கருத்துக்களை பதிவிட்டு பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement