- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி, கம்பீர் ,சேவாக் என அனைவரையும் தாண்டி சாதனை படைத்த ராகுல் – விவரம் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டியிலும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

முக்கிய வீரர்கள் அனைவரும் தடுமாறிய இந்தப்போட்டியில் இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக ரன் குவித்தனர். அதிலும் குறிப்பாக 5 ஆவது வீரராக இறங்கிய ராகுல் 113 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 112 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஒருநாள் போட்டியில் அடிக்கும் நான்காவது சதம் ஆக நேற்றைய சதம் பதிவாகியுள்ளது. மேலும் இதன்மூலம் கம்பீர், சேவாக் மற்றும் கோலி ஆகியோரை முந்தி ராகுல் சாதனைப் படைத்துள்ளார். அதன்படி ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் அடிக்க குறைந்த அளவு போட்டிகளை எடுத்துக்கொண்டு வீரராக அவர்கள் மூவரையும் ராகுல் முந்தி உள்ளார்.

31 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள ராகுலுக்கு இது அவருடைய நான்காவது சதமாக பதிவு செய்துள்ளார். இதே சாதனையை கோலி 36 இன்னிங்ஸ்களிலும், கம்பீர் 44 இன்னிங்ஸ்களிலும் மற்றும் சேவாக் 50 இன்னிங்ஸ்களிலும் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை பட்டியலில் ஷிகார் தவான் 24 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by