இவரையா வேலைக்கு ஆகமாட்டார்னு சொன்னீங்க. பிரித்தெடுத்த ராகுல் – விவரம் உள்ளே

Rahul
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Ind-1

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் துவக்க வீரரான ராகுல் சமீபகாலமாக சொதப்பலாக ஆடி வருவதால் அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா புதிய தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதேவேளையில் விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடக அணிக்காக களம் இறங்கிய ராகுல் 122 பந்துகளை சந்தித்து 131 ரன்கள் குவித்துள்ளார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

எனவே அணியில் இருந்து ராகுலை நீக்கியது தவறு என்றும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்தந்திருக்கலாம் என்றும் அவர் திறமையான வீரர் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement