டி20 போட்டிகளில் மிகப்பெரிய சாதனை படைக்க காத்திருக்கும் ராகுல் – விவரம் இதோ

Rahul

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி (இன்று) ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Ind-2

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் இன்று துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராகுல் இந்த போட்டியில் ஒரு மிகப் பெரிய சாதனை ஒன்றைப் படைக்க உள்ளார். அதன்படி அந்த சாதனையை இதுவரை டி20 போட்டிகளில் 974 ரன்களை ராகுல் அடித்துள்ளார்.

மேலும் 26 ரன்களை இந்த போட்டியில் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை குவித்த 7 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். அதுமட்டுமின்றி வேகமாக ஆயிரம் ரன்களை அடித்த 2வது டி20 இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் இதுவரை 28 டி20 இன்னிங்சில் விளையாடி 974 ரன்களை அடித்துள்ளார். முன்னதாக விரைவாக 1000 டி20 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் கோலி முதலிடத்தில் உள்ளார்.

Rahul

இதற்கு முன்னர் இந்தியா சார்பாக ரோகித் சர்மா, தோனி, கோலி, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்து உள்ளனர். இதனால் தற்போது ராகுல் ஏழாவது வீரராக சாதனை பட்டியலில் இணைய உள்ளார் மேலும் கோலிக்கு அடுத்து விரைவாக ஆயிரம் ரன்களை அடித்து இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் படைக்க உள்ளார்.

- Advertisement -

rahul

வெஸ்ட் எதிரான இன்றைய போட்டியில் அவர் 26 ரன்களை இன்றே அடிக்கும் பட்சத்தில் உலக அளவில் டி20 போட்டிகளில் வேகமாக ஆயிரம் ரன்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் பிஞ்சுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.