INDIA : விஜய் ஷங்கர் கதை முடிந்தது. 4 ஆவது இடத்தில் ஆட இவருக்கே அதிக வாய்ப்பு – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நாளை 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட

Vijay
- Advertisement -

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா 19 ரன்களிலும் தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றினர்.

rohith

- Advertisement -

அடுத்து வந்த விராத் கோலி 47 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தார். அதன் பின்னர் ராகுல் சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இந்த பயிற்சி போட்டியில் விஜய்சங்கர் 2 ரன்கள் எடுத்து சோபிக்க தவறினார். பின்னர் தோனி அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் நான்காவது வீரராக இந்திய அணியில் கேதர் ஜாதவ் காயம் காரணமாக களம் இறங்கவில்லை.

Rahul

அவருக்கு பதிலாக களமிறங்கிய ராகுல் அதிரடி சதம் அடித்து அசத்தினார். மேலும் பின் வரிசையில் ஆறாவது வீரராக களமிறங்கிய தோனியும் தனது பங்கிற்கு சதத்தினை அதிரடியாக விளாசி அசத்தினார். மேலும் ஹார்டிக் பாண்டியா 11 பந்துகளில் 21 ரன்கள் என்று அதிரடி காட்டினார். ஆனால் இந்த போட்டியில் 5 ஆவது வீரராக பேட்டிங் செய்த விஜய் சங்கர் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார் மேலும் பந்துவீச்சில் 6 ஓவர்கள் வீசிய விஜய்சங்கர் 46 ரன்களை குவித்து மிக மோசமான பவுலிங்கையும் வெளிப்படுத்தினார்.

Vijay Shankar

இதனால் அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெறுவது கடினம் என்றே தெரிகிறது. ஏனெனில் ஹர்டிக் பாண்டியா ஆல்ரவுண்டராக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ராகுலும் ஐபிஎல் தொடருக்கு தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இவர்கள் இருவருக்கும் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும். எனவே விஜய் சங்கருக்கு இந்த தொடரில் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்

Advertisement