டி20 போட்டியில் கோலி மற்றும் பாபர் அசாம் சாதனையை முறியடிக்கும் விளிம்பில் உள்ள ராகுல் – என்ன சாதனை தெரியுமா ?

Rahul
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

rahul

- Advertisement -

இந்த போட்டியில் ராகுல் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். கோலி மற்றும் பாபர் அசாமின் சாதனையை இந்த போட்டியில் அவர் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. அந்த சாதனை யாதெனில் டி20 போட்டியில் விரைவாக ஆயிரம் ரன்கள் அடித்த சாதனையை பாபர் அசாம் தனது கைவசம் வைத்துள்ளார்.

அவர் 26 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்து உள்ளா.ர் அதற்கடுத்து கோலி 27 இன்னிங்சுகளில் ஆயிரம் ரன்களை கடந்தார். தற்போது 25 ஆவது இன்னிங்ஸில் ஆடவிருக்கும் ராகுல் இன்னும் 121 ரன்கள் அடித்தால் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் புரிவார். 121 ரன்கள் என்பது டி20 போட்டியில் பெரிய விடயம் என்றாலும் அந்த ரன்களை எடுக்க தகுதியான வீரர் ராகுல் என்று இந்திய ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Rahul

ஏனெனில் டி20 போட்டிகளில் இரண்டு சதங்களை அவர் விலாசி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர்களில் விரைவாக ரன் குவிக்கும் அவரால் இந்த சாதனையை படைக்க வாய்ப்பு இருந்தாலும் அதை செய்வாரா என்று நம்பிக்கையுடன் பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement